கும்பம்: மார்ச் மாத ராசி பலன் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
கும்ப ராசி அன்பர்களே,
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சுபிக்ஷமான மாதமாகும். எல்லா காரியங்களும் தடையின்றி நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகி , உங்கள் திறமை வெளிப்படும். பலவகையிலும் முன்னேற்றம் காணும் மாதமிது. சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை நீடிக்கும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.
கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளுக்கான பொருட்களை சேர்ப்பீர்கள். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறி ஏற்பட்டு நீங்கும். செலவும் அதற்கேட்ப வரவும் அதிகரிக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.
கலைத்துறையினர் எதையும் உற்சாகமாக கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை குறையும். உங்களுக்கு வரும் இடையூறுகளையும் சாதகமாக மாற்றும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
அரசியல் துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்கலாம்.
மாணவர்கள் தங்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம் தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#கும்பம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி