துலாம்: மார்ச் மாத ராசி பலன் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்)

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்)
நினைத்ததை நடத்தி முடிக்கும் வீரியம் கொண்ட துலா ராசி அன்பர்களே...
இந்த மாதம், சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மைகள் அதிகரிக்கும். வாகனங்களில் கவனம் தேவை.
குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். பெண்களுக்கு முயற்சிகளில் பலன் கிடைக்கும். காரியங்களை முடிப்பதில் திறமை வெளிப்படும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். பெண்கள் எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.
கலைத் துறையினருக்கு உறவினர்கள் மூலம் உதவிகள், அனுசரணை கிடைக்கும். மனக்கவலை உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி வெற்றி வசப்படும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தேர்வு பயமின்றி மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.
பரிகாரம்: சுக்கிர பகவான் வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#துலாம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #சுவாதி #சித்திரை #விசாகம்