கடகம்: மார்ச் மாத ராசி பலன் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
அன்பான குணத்தால் கவலைகளை விரட்டும் கடக ராசி அன்பர்களே...
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அடுத்தவரை பற்றி அவதூறு பேசாமல் அமைதியாய் இருப்பது நன்மை பயக்கும்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றி, அன்யோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளுக்கான சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியில் முடியும்.
அரசியல்துறையினர் வளர்ச்சியைக் காண்பீர்கள். மற்றவர்களுக்கு செய்யும் செலவும், அதன்மூலம் வருமானமும் அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்: சிவன் வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
சந்திராஷ்டம் தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#கடகம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம்