மிதுனம்: மார்ச் மாத ராசி பலன் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

மிதுனம்: (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
பழகுவதற்கு இனிய மிதுன ராசி அன்பர்களே,
இந்த மாதம் கவலைகள் நீங்கி காரியங்கள் கைகூடும். எடுத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி நீண்ட முயற்சிக்கு பிறகே கிடைக்கும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல், தேவையில்லாத பயணங்கள் மூலம் வீண் செலவு ஏற்படலாம்.
குடும்பத்தில் அமைதி ஏற்பட அனைவரையும் அனுசரித்து செலாவது நல்லது. விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் செலவும் பெருகும். அனுசரித்து செல்வதன் மூலம் அனைத்திலும் வெற்றி காணலாம். பெண்கள் அடுத்தவர்கள் பேச்சை அப்படியே கேட்காமல் அதை ஆராந்து எதிலும் ஈடுபடுவது நல்லது.
தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
கலைத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணங்கள் உங்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பை ஏட்படுத்தலாம், கவனம் தேவை. வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம்.
அரசியல்துறையினர் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....
Tags:
#மிதுனம் ராசி பலன்கள் #மாத ராசி பலன் #புனர்பூசம் #திருவாதிரை #மிருகசிரீஷம்