மேஷம்: மார்ச் மாத ராசி பலன் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

02 Mar, 2025 05:15 PM
march-2025-monthly-horoscope-of-mesham-rasi-aries

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேஷ ராசி அன்பர்களே!!!,

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ர நிலையில் இருந்தாலும் குரு சாரம் பெற்றிருப்பதால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். இந்த மாதம் உத்வேகம் நிறைந்த மாதமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தினால் வெற்றி உங்கள் வசமே. வேலை இடத்தில சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது கூடுதல் பலன் அளிக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் பல மடங்கு சந்தோசமாக திரும்ப கிடைக்கும். அதனால் உங்கள் மன அமைதி கூடுவதுடன், ஆரோக்கியமும் மேம்படும்.

பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள், திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் உழைப்பை முதலீடு செய்தால் அதற்கான பலன் நிச்சயம்.

வியாபாரத்தில் புதிய ஆலோசனைகளைப் பெறுவீர்கள். அதன் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் நண்பர்கள் கிடைப்பார்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம், குல தெய்வ வழிபாடு கூடுதல் பலம் தரும். இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். அவர்களின் ஆசி புதிய உத்வேகத்தை கொடுக்கும்.

அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.

ஆக மொத்தம் இந்த மாதம் பல வழிகளில் ஆதாயம் தரும் மாதம்.

பரிகாரம்: முருக வழிபாட்டால் கவலை தீரும், காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 20. 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Tags:

#ராசி பலன்கள் #மாத ராசி பலன் #அஸ்வினி #பரணி #கார்த்திகை

Trending now

We @ Social Media