How To Make: கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி...

கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படம் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரை போன்றவற்றிக்கு தனித்துவமான சுவை உண்டு. அனால் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 3
உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தாளிக்கவேண்டிய பொருட்கள் :
நல்லெண்ணைய்- 1/2 கப்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை
பெருங்காயம் பவுடர்- 1/4 தேக்கரண்டி
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
புளி - 50 கிராம்
வேர்கடலை
முந்திரி
செய்முறை:
கோவில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவையானது புளியோதரை பொடி. எனவே அவை எப்படி தயார் செய்வது என்று முதலில் பார்ப்போம். அத்துடன் புளிக்கரைசல் தயார் செய்வதற்கான செய்முறை கீழே.
1. புளியோதரை பொடிக்கு முதலில் சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்துக் கொள்ளவும். அது சூடானதும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அத்துடன் மிளகு, மல்லி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வறுக்கவும்.
2. இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுக்கவும்.
3. பின்பு இதை நன்றாக ஆறவைக்கவும். இவை நன்கு ஆறிய பிறகு மிக்சியில் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
4. அடுத்து ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. இப்போது ஒரு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
6. பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
7. இந்த கலவை நன்கு கொதித்த பின்னர் அவற்றோடு முன்பு அரைத்து வைத்துள்ள புளியோதரை பொடியை சேர்த்துக் கொள்ளவும். அவை நன்கு கொதித்து, கீழே இறக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
8. இத்துடன் தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்கு சிறிதளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
9. இப்போது வடித்து வைத்துள்ள சாதத்துடன் தனியாக வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை முதலில் சேர்க்கவும். பிறகு புளிக்கலவையை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
10. இப்பொழுது சுவையான கோவில் புளியோதரை தயார்.
Tags:
#puli sadam recipe in tamil #Puliyodharai #Iyengar Puliyodharai Recipe #Kovil Puliyodharai #puli sadam recipe in tamil