Maha Kumbh Mela 2025: மஹா கும்பமேளா 2025 - கின்னஸ்-ல் எதிரொலிக்கும் இந்தியாவின் புகழ்

Maha Kumbh Mela 2025: 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-ல் நடைபெற்ற உலகப்புகழ் மகாகும்ப மேளா நிகழ்வு தொடங்கிய நாளிலிருந்து பல காரணங்களுக்காக தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இது மிகப்பெரிய ஆன்மீகக் நிகழ்வு மட்டுமல்ல அதையும் தாண்டி சுமார் 66.21 கோடி மக்கள் ஒன்றிணைந்த மிகப்பெரிய நிகழ்வும் கூட.
அப்படிப்பட்ட இந்த நிகழ்வு துடிப்பான கலாச்சாரம், பக்தி மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் அதே வேளையில் கின்னஸ் உள்பட பல சாதனைகளை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல முயற்சிகள் கின்னஸ் சாதனைக்காக மேற்கொள்ளப்பட்டதன் பலனாக அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா 2025 நிறைவு விழாவில் பல்வேறு பிரிவுகளில் பெறப்பட்ட கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ்களை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். அதன்படி,
1. துப்புரவு இயக்கம்: ஒரே நேரத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்கள் நதியை சுத்தம் செய்தல் அல்லது ஒரே நேரத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரு இடத்தை சுத்தம் செய்தல் என்ற வகையில் சுமார் 15,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டாக தெருக்களைச் சுத்தம் செய்து இதற்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன் மார்ச் 02, 2019 அன்று 10,181 துப்புரவு பணியாளர்கள் ஒரே நேரத்தில் துப்புரவு செய்தனர்.
Tags:
#Maha Kumbh Mela 2025 #மஹா கும்பமேளா 2025 #கின்னஸ் #கின்னஸ் சாதனை #kumbha mela History