Central Bank of India: ரூ 85,920 சம்பளம் ... 1000 காலி பணியிடங்கள். #JobOpenings #interview #careers

06 Feb, 2025 11:57 AM
1000-job-vacancies-in-central-bank-of-india

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் உதவி மேலாளர் நிலையில் கிரெடிட் ஆபீஸருக்கான 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கபடும் நபர்களுக்குக்கான சம்பளம் ருபாய் 85,920 ரூபாய் வரை இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் பிரிவு வாரியாக
1. எஸ்சி - 150,
2. எஸ்டி -- 75,
3. ஒபிசி - 270,
4. பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 100,
5. பொதுப் பிரிவு - 405

என மொத்தம் 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 40 காலிப் பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு:
- 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை
- பிறந்த தேதி: 30.11.1994 தேதிக்கு முன்பும் 30.11.2004 தேதிக்கு பின்பும் பிறந்தவராக இருக்க கூடாது.
- எஸ்சி/எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்கள் - தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விகிதம்:
ரூ. 48,480 முதல் ரூ 85,920 வரை

விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.
- எஸ்சி / எஸ்டி பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.150 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை:
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றின் அடிப்படையில் 130 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு நேர்முகத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இந்த இரண்டிலும் பெரும் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
- https://www.centralbankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக தகவலுக்கு: https://www.centralbankofindia.co.in/en/recruitments

#JobOpenings #interview #careers #Central Bank of India #BankJob

Tags:

#Central Bank of India #bank Job #Job Openings #interview #credit officer

Trending now

We @ Social Media