Vidaamuyarchi: வெளியானது ‘விடாமுயற்சி’ - அஜித் ரசிகர்கள் ஆரவாரம்!!! கொண்டாட்டம்!!! #VidaamuyarchiFDFS

06 Feb, 2025 09:44 AM
vidaamuyarchi-released-ajith-fans-are-in-a-frenzy-celebration

Vidaamuyarchi Release: மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (6 February 2025) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு சிக்கல்களை கடந்து இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் முதல் காட்சியாக வெளியான இந்த படம் அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும், 2023-ம் ஆண்டு ‘துணிவு’ படத்திற்கு பிறகு வெளியாகும் அஜித் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடல் பாடல் என நீளும் இந்த கொண்டாட்டம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதோடு வசூல் பெரிதாக இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘விடாமுயற்சி’ படம் விக்னேஷ் சிவன் நீக்கம், மகிழ் திருமேனி பொறுப்பேற்பு, கதை சர்ச்சை, பொங்கல் வெளியீடு போன்ற பல்வேறு சிக்கல்களை கடந்து விடா முயற்சியுடன் ஒருவழியாக இன்று வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது!!!

#VidaaMuyarchi #VidaamuyarchiFDFS

Tags:

#விடாமுயற்சி #அஜித் #vidaamuyarchi #ajith kumar #magizh thirumeni

Trending now

We @ Social Media