விநாயகர் வழிபாடு மற்றும் விநாயகர் பாடல் வரிகள்:
விநாயகர் வழிபாடு:
கடவுள் வழிபாட்டில் மிக மிக எளிய வழிபாடு என்பது விநாயகர் வழிபாடே. வழிபாட்டிற்கு சிலையோ, படமோ, பூக்களோ, மாலைகளோ என எதுவும் தேவையில்லை. மஞ்சளோ, மாட்டுசாணமோ, மண் என எதாவது ஒரு பொருளை கைப்பிடியளவு எடுத்து பிடித்து வைத்து, அனைத்து இடங்களிலும் விளைந்திருக்கும் அருகம்புல்லை வைத்தால் அவரே பிள்ளையார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த செல்ல கடவுள் விநாயகர் தான். அதுமட்டுமன்றி இந்து சமய கடவுள் வழிபாட்டின் முதன்மைக் கடவுள். இவரை பிள்ளையார் / விநாயகர் / கணபதி / ஆனைமுகன் / விக்னேஸ்வரன் என பல பெயர்களில் அழைக்கப்படுவது வழக்கம். இங்கே அவரின் மனதிற்கு பிடித்த சில பாடல்களை காணலாம்.
விநாயகர் வணக்கம்:
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
-திருமூலர்
பிள்ளையார் பிள்ளையார்:
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணன் பிள்ளையார்
நேரும் துன்பம் யாவுமே நீக்கி வைக்கும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
வேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்
வேண்டும் வரங்கள் யாவையுமே தந்தருளும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதன்:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணி விப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
–கபிலர்
துங்கக் கரிமுகத்துத் தூமணி:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா
-ஒளவையார்
மேலும் விநாயகர் பாடல்கள்:
1. விநாயகர் 108 போற்றி
2. ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்
3. விநாயகர் அகவல்