மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
நீதி, நேர்மை என்று குறிக்கோளுடன் வாழும் மீன ராசி அன்பர்களே...
இந்த மாதம் நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். சின்ன விஷயம் கூட பெரிய லாபமாக நடந்து முடியும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கவுரவத்தை அதிகரிக்கும்.
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். திருமண முயற்சி சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் கூடும். பெண்களுக்கு உறவுகளால் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி மன மகிழ்ச்சி உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு அதிகரித்து மனநிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி தரும். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.
கலைத்துறையினர் பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சி பொங்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் நல்ல ஆதாயத்தை தரும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து நல்ல பெயர் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம், மனவருத்தம் நீங்கும். ஆடம்பரமான பொருட்களை சேர்த்து மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன், நீதிமன்றம் சார்ந்த விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் தங்கள் முயற்சிக்கு ஏற்ப சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: குல தெய்வ வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம் தினங்கள்: 18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....