மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)
ஊருக்கு உழைப்பதில் மகிழ்ச்சி காணும் மகர ராசி அன்பர்களே..
இந்த மாதம் அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். வீட்டில் செல்வம் சேரும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.
கலைத்துறையினர் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பதவி உயர்வு தேடி வரும். சிலருக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
அரசியல் துறையினருக்கு லாபம் எதிர்பார்த்தபடி உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறுசிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: விநாயக பெருமானை வழிபட வினைகள் தீரும்
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....