தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
சுறுசுறுப்புடன் வேலைகளை செய்யும் தனுசு ராசி அன்பர்களே...
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடந்து முடியும். உங்கள் மீதிருந்த எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய பின் விளைவுகளை தவிர்க்கலாம். முன்பின் தெரியாதவர்களுக்கு உத்திரவாதம் தராமல் இருப்பது இருப்பது நல்லது. கடன் சுமை குறையும். கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உடனிருப்பவர்களால் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.
வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கூடும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் பல முறை யோசித்து செய்வது நல்லது.
தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் வந்து சேரும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். தொழில் போட்டிகள், கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவிகள் தாமதமானாலும் தேடி வரும். புதிய வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு காரியத்தை முடிப்பார்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
அரசியல்துறையினர் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிட்டும். முயற்சிகள் வெற்றி பெறும்.
பரிகாரம்: சிவ வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....