விருச்சிகம்: மார்ச் மாத ராசி பலன் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

By News Dsk

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசி அன்பர்களே...

இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மைகளை பெறுவீர்கள். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார்.பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்கம் நீங்கி முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிரிகளின் எதிர்ப்புகள் அகலும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

அரசியல் துறையினருக்கு மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். பாராட்டு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு வழிபாடு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE