கன்னி: மார்ச் மாத ராசி பலன் (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

By News Dsk

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கொடுத்த வாக்கை காப்பாற்ற எதற்கும் துணியும் கன்னி ராசி அன்பர்களே...

இந்த மாதம், காரியங்கள் அனைத்தும் வேகம் பெற்று வெற்றி வந்து சேரும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, தேவையற்ற செலவு போன்றவை தோன்றி அகலும். மனா குழப்பங்கள் தீரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நலம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு எல்லாம் உண்டாகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் வீண் விவாதம் தவிர்த்து, நிதானமாக உங்கள் தரப்பு நியாயத்தை சொல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய பொருட்கள் சேர்க்கை இருக்கும்.

சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பும் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட உங்கள் கவலை குறைந்து நிம்மதி பெருகி, காரிய அனுகூலம் உண்டாகும்.

அரசியல் துறையினருக்கு மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். லாபம் இரட்டிப்பாகும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புகழ் கிடைக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களில் திறமை வெளிப்படும். எதிர்பார்த்தபடி வெற்றி கைகூடும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி வழிபாடு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம் தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26

மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE