சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
துணிச்சலுக்கு பெயர் போன சிம்ம ராசி அன்பர்களே...
இந்த மாதம் சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். செலவு வரம்புக்குள் இருக்கும். மதிப்பும், மரியாதையும் சமூகத்தில் உயரும்.
கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்வதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் தோண்டி மறையும். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
தொழில், வியாபாரம் அமோகமாக இருக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். பண உதவியும் பல்வேறு இடங்களிலிருந்து வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த படி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கலைத்துறையினர், வாகனங்களை கவனமாக பயன்படுத்தவும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி, தேவையில்லாத கவலையை நீங்களே ஏற்படுத்தாதீர்கள். பிரச்சினைகள் தீர சம்பந்தப்பட்ட நபர்களுடன் நீங்களே நேரடியாக பேசி தீர்ப்பது நல்லது.
அரசியல் துறையினர், நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். புதிய நட்பு கிடைக்கும் கவனமாக கையாள்வது நல்லது.
மாணவர்கள், தங்கள் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். நிச்சயம் அதை அடைந்தே தீர்வீர்கள்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம் தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....