ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்)
சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசி அன்பர்களே,
தைரியம் அதிகரித்து, உங்கள் செயல்களினால் மற்றவர்களின் பாராட்டுகளை குவிக்கும் மாதமிது. எந்த ஒரு விஷயத்திலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்க ஏற்ற மதம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முழு கவனமும் இருக்கும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும்.
அலுவல் தொடர்பான பயணங்கள் இருக்கும். அரசாங்க வழி காரியங்கள் இனிதே நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்பனி திறன் அதிகரிக்கும்.
கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் நட்புறவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்சினை தீர்ந்து வருமானம் கணிசமாக உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும் மதம் இது.
தொழில், வியாபாரத்தில் சுபச் செலவு ஏற்படும். புதிய ஆர்டர்களால் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் உண்டாகலாம்.
அரசியல் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியம் ஒன்று திடீரென சாதகமாக நடந்து முடியும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமி வழிபாடு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம் தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
மற்ற ராசிகளுக்கான பலன்களை காண, இங்கே கிளிக் செய்யவும்....