பொதுவாக "உணவே மருந்து" என்று சொல்வார்கள். ஏனெனில் நாம் உண்ணும் உணவு தான் நம் உடம்புக்கான சக்தியை கொடுத்து நமது உடல் உபாதைகளை தீர்த்து நம்மை நலமுடன் வாழ வைக்கிறது. அதேபோல இயற்கையே முதன்மையான மருத்துவர் என்பார்கள். ஏனெனில் அந்தந்த காலகட்டத்தில் நிலவும் தட்ப வெட்பத்திற்கு ஏற்றவாறு மனிதர்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகளை கொடுக்கிறது.
அப்படிப்பட்ட உணவை வீணடிக்காமல் சரிவிகித முறையில் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதிகம் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை நம் டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
குறிப்பாக வெப்பம் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் இந்த கோடையில், உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை தவிர்த்து உடலை குளிர்ச்சியடையச் செய்யும் உணவுகளை நாம் நம்முடைய தினசரி டயட்டில் சேர்க்க வேண்டும். இந்தப் பட்டியலில் எந்தெந்த காய்கறிகள் உள்ளன என்பதை இங்கே பார்ப்போம்.
அவசியம் தவிர்க்க வேண்டியவை:
இஞ்சி: இதில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. அதனால் தான் குளிர்காலத்தில் இஞ்சி டீ மிகவும் பிரபலம்.
கத்திரிக்காய்: Anti-Cooling காய்கறியான இதை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
முட்டைக்கோஸ்: இவை கேன்சரை தடுக்க உதவும். எனினும் இது அனைவருக்கும் ஏற்றது அல்ல. இவை உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு: பொதுவாகவே வேர் காய்கறிகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவை உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
வெங்காயம் & பூண்டு: இவற்றை தவிர்க்கலாம் அல்லது மிக குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும்.
காளான்: காளான்களில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் இவை உடலில் வெப்பத்தை உருவாக்க கூடிய தன்மை கொண்டவை.
பூசணிக்காய்: உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியவை. அதனால் குளிர்கால டயட்டில் தாராளமாக சேர்த்து கொள்ள வேண்டிய ஒரு காய்.
பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை: உடலில் நீரிழப்பு (டிஹைட்ரேஷன்) ஏற்பட வழிவகுக்கும்.
அவசியம் சாப்பிட வேண்டியவை:
வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை மாதங்களில் கீழ்கண்ட அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
1. வெள்ளரி,
2. தக்காளி,
3. தர்பூசணி,
4. சிட்ரஸ் பழங்கள்,
5. கிவி,
6, புதினா.
இது போன்ற காய்கறிகள் உணவில் சேர்க்கும் போது அவை உடலை குளிர்ச்சியடையச் செய்கின்றன.
குறிப்பு: இது பொதுவான வழிகாட்டல்கள் மட்டுமே. இது தனிப்பட்ட நபர்களின் உடல் நிலைக்கு ஏற்ற மாறுபடும்.