‘டிராகன் (Dragon)’ திரைப்படம் ரூ 100 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளதாக அந்த படத்தின் இயக்குநரும், நடிகருமான அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் விறுவிறுப்பான திரைக்கதைப் பின்னணியில் ஒரு சாமானிய இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்ட இத்திரைப்படம் கடந்த பிப் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும் ‘டிராகன்’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். நாயகிகள் கயாது லோஹார், அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் கலக்கல் கூட்டணி திரையில் யதார்த்த நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு சிறந்த விருந்தளித்துள்ளனர். மேலும் லியோன் ஜேம்ஸ் இசை இத்திரைப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 2) அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப்பதிவில் "பார்வையாளர்களுக்கு நூறு கோடி முறை நன்றி" என்ற பொருளில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.