அறிமுகமான ஜியோஹாட்ஸ்டார்: இணைந்த ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார். OTT யில் புதிய புரட்சி. #JIOHOTSTAR

By News Dsk

மும்பை: பொழுதுபோக்கு VOD சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களான ஜியோ சினிமா (JIO CINEMA) மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (DISNEY+ HOTSTAR) இணைந்து புதிய தளமான ‘ஜியோஹாட்ஸ்டார்’ (JIOHOTSTAR) - ஐ இன்று (பிப்.14) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சார்ந்த வீடியோக்களை பயனர்கள் கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் வால்ட் டிஸ்னி (The Walt Disney) நிறுவனங்கள் இணைந்து தங்கள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்கள் கூட்டாக செயல்பட உள்ளதாக அறிவித்தன. இந்த நிலையில் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைப்பாக ஜியோஹாட்ஸ்டார் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

பொதுவாக ஓடிடி தள பயன்பாடு மற்றும் அதற்கான தளங்கள் உலக அளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டு, உலக சினிமா, இந்திய சினிமா என அனைத்து தரப்பட்ட பயனர்களை அதிகம் கவர்ந்திருப்பது இந்த இரண்டு நிறுவனங்களின் தான். எனவே தற்போது அந்த தளங்கள் இரண்டும் ஒன்றிணைந்துள்ள இந்த புதிய தளமான "ஜியோஹாட்ஸ்டார்" - ல் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50 கோடி என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் உலக அளவில் இந்த துறையில் இதுவரை இல்லாத அளவு அதிக பயனர்களை கொண்ட தளம் என்ற பெருமையை பெரும் என ஜியோஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 19 மொழிகளில் இந்த தளம் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் 2032-ல் ஓடிடி சந்தை மதிப்பு 836.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரம்பக்கட்டமாக பயனர்களை ஈர்க்கும் வகையில் ரூ 149 முதல் சந்தா திட்டங்கள் தொடங்கவுள்ளதாகவும் ஏற்கெனவே ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் ஜியோஹாட்ஸ்டாரை தடையின்றி பழைய சந்தாவுடன் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE