STR49: நடிகர் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகர்?

By News Dsk

நடிகர் சிலம்பரசன் தற்போது 49வது படமாக, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், "பார்க்கிங்" திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் துவங்கியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி வைரலானது.

மேலும் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய சந்தானம் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் மீண்டும் சிம்பு49 - வது படத்தில் இணைந்துள்ளதாக(?) தகவல் வெளியாகியுள்ளது. மதகஜராஜா படத்தின் வெற்றியே இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

தற்போது சந்தானம் ஹீரோவாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE