நடிகை பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமண ஆல்பம். சமூக வலைதளங்களில் வைரல்.
12 Feb, 2025 09:29 AM

நடிகை பார்வதி நாயர் - ஆஷ்ரித் தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராம்-ல் பகிர்ந்துள்ளார். இது இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் பிப்.10, 2025 ம் தேதி திருவான்மியூரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பார்வதி நாயர் தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘தி கோட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் ‘ஆலம்பனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: instagram